அருமனை அருகே வீட்டில் தீ விபத்து

அருமனை அருகே வீட்டில் தீ விபத்து நடந்தது.

Update: 2022-05-14 21:39 GMT
அருமனை:
அருமனை அருகே உள்ள காரோடு பாலுக்குழி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது70). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் திடீரென புகை மூட்டத்துடன் தீ பிடித்தது.  கண் விழித்த சுந்தர்ராஜன் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு சத்தம் போட்டார். உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்டனர். மேலும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது சம்பந்தமாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---

மேலும் செய்திகள்