அம்மாபேட்டை அருகே ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுர தளவாட பொருட்கள் திருட்டு

அம்மாபேட்டை அருகே ரூ.31 லட்சம் மதிப்பிலான செல்போன் கோபுர தளவாட பொருட்கள் திருட்டுபோனது.

Update: 2022-05-14 21:32 GMT
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் கடந்த 2009-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு செல்போன் கோபுரம் பயன்பாடு இல்லாததால், அதன் இயக்கம் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதன்பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் செல்போன் கோபுரத்தை பார்வையிடுவதற்காக சம்பந்தப்பட்ட தனியார் செல்போன் கோபுர நிறுவனத்தின் பொறியாளர் கோசலகுமார் வந்துள்ளார்.
அப்போது செல்போன் கோபுரம் இருந்த இடத்தில் கிடந்த தளவாடப் பொருட்களை காணவில்லை. யாரோ மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.31 லட்சத்து 54 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தனியார் செல்போன் திட்ட பொறியாளர் கோசலகுமார் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் திருட்டு போன தளவாடப் பொருட்களை கண்டுபிடித்து தரக்கோரி மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தளவாடப் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்