வாகனம் மோதி வாலிபர் பலி

காட்டுமன்னார்கோவில் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-05-14 19:49 GMT
காட்டுமன்னார்கோவில், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதி மூலம் மகன் பிரபு(வயது 33). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குச்சூர் கிராமத்தில் உள்ள அவரது தங்கை வீட்டுக்கு வந்தார். பின்னர் பிரபு அங்கிருந்து அவரது தங்கை மகன் தீபக்குமாரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு முடிகண்டநல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 

காட்டுமன்னார்கோவில் மோவூர் சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரபு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான பிரபுவுக்கு ரேவதி என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனர். 

மேலும் செய்திகள்