ஓடும் ரெயிலில் செல்போன், லேப்டாப் திருடிய வாலிபர் கைது

ஓடும் ரெயிலில் செல்போன், லேப்டாப் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-14 19:49 GMT
ஜோலார்பேட்டை 

ஓடும் ரெயிலில் செல்போன், லேப்டாப் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை, மே.15-

ஓடும் ரெயிலில் செல்போன், லேப்டாப் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் கே.வி.ரெங்காரெட்டி சரூம் நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் குமார் (வயது 53). இவர் நேற்று முன்தினம் ஐதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது அரவிந்தகுமார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சக பயணிகளும் தூங்கிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அவர் வைத்திருந்த கருப்பு நிற பேக்கை யாரோ திருடிச் சென்று விட்டனர். கண் விழித்து பார்த்த அரவிந்த்குமார் இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார். 
அது குறித்து அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வந்தனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

அவரை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த இக்பால் மகன் சபீர் (வயது 35). என்பதும் ஓடும் ரெயிலில் செல்போன் மற்றும் லேப்டாப் திருடியதையும் ஒப்புக்கொண்டார் இதனையெடுத்து செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமதல் செய்து சபீரை ெரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்