வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சிறுமியை திருமணம் செய்த வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-14 19:34 GMT
வெள்ளியணை, 
வெள்ளியணை அருகே உள்ள அல்லாளிகவுண்டனூரை சேர்ந்தவர் பாலமுருகன்  (வயது 27), வேன் டிரைவர். சிறுமியை திருமணம் செய்ததாக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதாபி அருகே பொம்மணத்துப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடிபோதையில் சென்ற பாலமுருகன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று புலம்பி கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்