நாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெருநடை ஓட்டம்

நாகர்கோவிலில் நடந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெருநடை ஓட்டத்தில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பங்கேற்றனர்.

Update: 2022-05-14 19:20 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவிலில் நடந்த சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பெருநடை ஓட்டத்தில் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பங்கேற்றனர்.
சாலை விழிப்புணர்வு ஓட்டம்
குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டு பல உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருநடை ஓட்டம் நேற்று நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கியது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பெருநடை ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.
ஓட்டமானது அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி மணிமேடை சந்திப்பு, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கட்டபொம்மன் சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை, வடசேரி சந்திப்பு வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.
50 பேருக்கு பரிசு
ஓட்டத்தில் போலீசார், பள்ளி மாணவர்கள், ஊர்க்காவல் படையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலில் வந்த 50 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்         பிரசாத் பரிசுகள்    வழங்கி னார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்