அரக்கோணத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டும் அவலம்
அரக்கோணத்தில் சோளிங்கர் சாலையில் பாலத்திற்கு அருகில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
அரக்கோணம், மே.15-
அரக்கோணத்தில் சோளிங்கர் சாலையில் பாலத்திற்கு அருகில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படுகின்ற குப்ைபகளை வாகனங்களில் எடுத்து வந்து சோளிங்கர் சாலையில் உள்ள ஒரு பாலத்துக்கு அருகில் கொட்டுகிறார்கள். குப்பைகளை கொட்டுவதற்கென ஒரு இடம் இருக்கும்போது, அங்குக் கொட்டாமல் சாலையோரம் கொட்டுவது சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுவதோடு பாலத்திற்கு கீழ் குப்பைகளை கொட்ட நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.