டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் கழக கூட்டம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் கழக கூட்டம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் செஞ்சுருள் கழக கூட்டம் நடந்தது. கல்லூரி உதவி பேராசிரியரும், செஞ்சுருள் கழக ஒருங்கிணைப்பாளருமான பிரதீப் ராஜா வரவேற்று பேசினார்.
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியின் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மைய ஆலோசகர் சாவித்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், அதிலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து விளக்கி கூறினார். மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வாழ்த்தி பேசினார். செஞ்சுருள் கழக மாணவ செயலாளர் சதீஷ் நன்றி கூறினார்.