அகழாய்வில் கிடைத்த யானைத்தந்தம்
சிவகாசி அருகே அகழாய்வில் கிடைத்த யானைத்தந்தம் கிடைத்தன.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் 7-வது குழி தோண்டப்பட்டது. அதில் நேற்று யானை தந்தத்தின் ஒரு பகுதியும், மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் பெண்கள் பயன்படுத்தக்கூடிய அணிகலன்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள் ஏராளமாக கிடைத்துள்ளன.
மேலும் சிறுவர்கள் விளையாட பயன்படுத்தப்பட்ட சங்கினால் செய்யப்பட்ட விசில், தாயக் கட்டைகள், சதுர கட்டைகள், பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தப்பட்ட சில்லுவட்டுகள் கிடைத்துள்ளன. மேலும் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் உடைந்த நிலையில் கிடைத்தன. இதனால் வீட்டின் சுவர் அல்லது உறைகிணறுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர், இணை இயக்குனர் பரத்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.