சோமசமுத்திரம் சீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் பிரதோஷ விழா
சோமசமுத்திரம் சீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சோளிங்கர்
சோமசமுத்திரம் சீமான் சகாதேவர் சித்தர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், இளநீர் மற்றும் பல்வேறு வகையான நறுமணப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தி அருகம்புல் உள்பட பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஜெயகோபி செய்திருந்தார்.