பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
பாலக்கோடு:
பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த முகாமில் தாசில்தார் ராஜசேகரன் கலந்து கொண்டு பத்திரப்பதிவு முடிந்தபின், சம்பந்தப்பட்ட தகவல், சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக, வருவாய் துறைக்கு அனுப்பும் முறை குறித்தும், சொத்து வாங்கியவர், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தை அணுகி, பட்டா பெயர் மாறுதல் பெறுவது குறித்தும் விளக்கி கூறினார். மேலும் பட்டா, உட்பிரிவு போன்றவற்றை காலதாமதமின்றி உடனடியாக செய்து தர என்று கூறினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.