தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி வாலிபர் பலியானார்.

Update: 2022-05-14 17:24 GMT
ஓசூர்:
ஓசூர் இந்திராநகர் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். குடியிருப்பு பகுதியில் சென்றபோது, அங்கிருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து ஓசூர் டவுன் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் மூர்த்தி அட்கோ போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர். ஆனால் தண்ணீரில் மூழ்கி பலியான வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்