மணல் கடத்தல்; லோடு ஆட்டோ பறிமுதல்
கீழ்வேளூர் அருகே மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
சிக்கல்:
கீழ்வேளூர் போலீஸ் சரகம் ராதாமங்கலம் ஊராட்சி நாகவிளாகம் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் அருகே மணல் கடத்தப்படுவதாக கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது லோடு ஆட்டோவில் கலவை மணல் ஏற்றி கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.