லட்சுமி நரசிம்மர் கோவில் பிரமோற்சவ விழாவில் வேடுபறி உற்சவம்

ேசாளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் வேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-05-14 17:07 GMT
சோளிங்கர்
ேசாளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் வேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதன் 9-வது நாளையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தோசித பெருமாளுக்கு அபிேஷகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி கங்கைகொண்டான் மண்டபத்தில் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வேடுபரி உற்சவம் நடைபெற்றது. 
இதில் பக்தோசிதப் பெருமாள், திருமங்கை மன்னன் உற்சவமூர்த்திகள் குதிரை வாகனத்தில் தனித்தனியாக எழுந்தருளி வேடுபறி கண்டருளினர்.

இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்