4 வழிச்சாலை அமைக்கும் பணியை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

வாணியம்பாடி-ஊத்தங்கரை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-14 16:59 GMT
திருப்பத்தூர்
வாணியம்பாடி-ஊத்தங்கரை இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.

சேலம் முதல் வாணியம்பாடி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது ஊத்தங்கரை முதல் திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி வரை 45 கிலோமீட்டர் தூரம் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ரூ.302 கோடி மதிப்பீட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியினை தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். 
அப்போது சாலை பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள், குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் தாமதமாக நடைபெற்று வரும் பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்கவும் உத்தரவிட்டார். 

ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை வேலூர் கோட்ட பொறியாளர் பழனிச்சாமி, உதவி கோட்ட பொறியாளர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்