பாண்டமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பாண்டமங்கலம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
பரமத்திவேலூர்:
பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மேகலா (34). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கார்த்திக் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதை மனைவி கண்டித்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் கார்த்திக் மது குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு மேகலா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த கார்த்திக் கடந்த 10-ந் தேதி விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் இறந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.