சாராய விற்பனை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

கச்சிராயப்பாளையம் அருகே சாராய விற்பனை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-14 16:44 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் கச்சிராயப்பாளையம் அடுத்த தெங்கியாநத்தம் கிராமத்தில் சாராய விற்பனை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், சாராயம் விற்பதால், ஊர் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் சாராயம் விற்பதை அனுமதிக்காதீர்கள். அவ்வாறு சாராய விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவியுங்கள் என்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, தனிப்பிரிவு போலீஸ் விஜய், ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்