வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

சங்கராபுரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2022-05-14 16:38 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஷேக்மதார் மகன் மாலிக் பாட்ஷா. இவரது வீட்டிற்குள் நேற்று மதியம் சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதைபார்த்த மாலிக் பாட்ஷா குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் இருந்த சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

மேலும் செய்திகள்