மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ளார் தளவாய்புரம் வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரித்துரை (வயது 52). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் சிவகிரிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தெற்கு சத்திரம் மங்கம்மா சாலையில் சென்றபோது அந்த வழியாக நடந்து வந்த சிவகிரி வடக்கு சத்திரத்தை சேர்ந்த கணபதி மகன் குருசாமி (36) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் மாரித்துரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாரித்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.