கோவையில் டான்செட் நுழைவுத்தேர்வை 3 ஆயிரத்து 340 பேர் எழுதினர்
கோவையில் டான்செட் நுழைவுத்தேர்வை 3 ஆயிரத்து 340 பேர் எழுதினர்
கோவை
கோவையில் டான்செட் நுழைவுத்தேர்வை 3 ஆயிரத்து 340 பேர் எழுதினர்.
டான்செட் நுழைவு தேர்வு
எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுகலை படிப்புகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு என்று அழைக்கப்படும் டான்செட்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த டான் செட் தேர்வு நடந்தது.
இந்ததேர்வை மாணவர்கள் எழுதும் வகையில் தமிழகத்தில் அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப் பட்டது.
3,340 பேர்
இந்த தேர்வு கோவை மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 340 பேர் எழுதினர். 363 பேர் தேர்வு எழுத வர வில்லை.
தேர்வுக்காக கோவையில் கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி (ஜி.சி.டி.) அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், பி.எஸ்.ஜி. கல்லூரி, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி.ஆராய்ச்சிகல்லூரி, சி.ஐ.டி. கல்லூரி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடந்தது.
அதில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
ஜி.சி.டி. கல்லூரியில் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடந்த எம்.சி.ஏ.வுக்கான நுழைவு தேர்வை 704 பேர் எழுதினர்.
பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை நடைபெற்ற எம்.பி.ஏ. தேர்வை 2,636 பேர் எழுதினர்.
இதேபோல இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜி.சி.டி. கல்லூரியில் மட்டும் எம்.இ மற்றும் எம்.டெக் படிப்புக்கான நுழைவு தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 693 பேர் எழுத உள்ளனர்.