போலி ஆவணங்களுடன் தங்கி இருந்த வங்கதேச வாலிபர் கைது

போலி ஆவணங்களுடன் தங்கி இருந்த வங்கதேச வாலிபர் கைது

Update: 2022-05-14 15:54 GMT
வீரபாண்டி:
 வீரபாண்டி சவுடாம்பிகை நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான ஒருவரைப்பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். 
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றி பார்த்த போது அது போலியானது என்று தெரியவந்தது. பின்பு போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வங்காள நாட்ைட நாட்டைச் சேர்ந்த ஆலமின் மியாமன் (வயது 30). என்பதும் இவர் திருப்பூர்-பல்லடம் சாலை மீனாம்பாறை பகுதியில் கடந்த 3 வருடங்களாக தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பனியன் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்ததும், தன்னுடன் மற்ற 2 பேர் தங்கி இருந்ததாகவும் அவர்கள் மீண்டும் நாட்டுக்கு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நிரந்தரமாக இங்கேயே தங்க போலியான ஆதார் மற்றும் அடையாள அட்டை பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்