பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-05-14 15:42 GMT
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையத்தில் பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பராமரிப்பு மற்றும் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்த கோவில் கமிட்டியினர் முடிவு செய்தனர். இதன்படி கடந்த 11-ந்தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து கோவிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழாவையொட்டி சிவகிரி ஆதீன பாலமுருகன் ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் விநாயகர், கருப்பராயன், பொன்காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி முத்துசிவசுப்பிரமணிய சிவாச்சாரியார் கும்பாபிஷேக சர்வசாதகம் செய்து வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்