தொழிலாளியிடம் பணம் திருடியவர் கைது
நாகையில் தொழிலாளியிடம் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
வெளிப்பாளையம்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தோப்பு தெரு பகுதியை சேர்ந்தவர் சேதுமாதவன். இவர் சம்பவத்தன்று நாகையில் திருமேனி செட்டித்தெருவில் உள்ள ஒரு பூக்கடையில் பூக்கட்டும் வேலை செய்து போது கடையில் தனது சட்டையை கழட்டி ஆணியில் மாட்டி வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நாகை மருந்து கொத்தளரோடு பகுதியை சேர்ந்த ஆனந்த், சேதுமாதவன் சட்டைப்பையில் இருந்த ரூ.250-யை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சேதுமாதவன் நாகை டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.