குன்னூர் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் கரக உற்வச திருவிழா

குன்னூர் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் கரக உற்வச திருவிழா

Update: 2022-05-14 15:26 GMT
குன்னூர் 

குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரானா தொற்று காரணமாக அனைத்து கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்ததால் தமிழக அரசு ஊரடங்கை நீக்கியது. இதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழாக்கள் பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குன்னூர் அருகேயுள்ளபழைய அருவங்காட்டில் முத்து மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் 48வது ஆண்டு கரக உற்சவ திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்த விழாவில்  கரக உற்சவம் திருவீதி உலா நடைபெற்றது அதில் அம்மன் புஷ்பல்லாக்கில் அலங்கரிக்கபட்டு ஊர்வலமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நிகழ்ச்சியில் வானவேடிக்கை நடத்தப்பட்டது.இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் மேலதாளங்களுக்கு ஆடிபாடி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்