பலாப்பழ வியாபாரிக்கு கத்திக்குத்து

வீரபாண்டி கோவில் திருவிழாவில், பலாப்பழ வியாபாரி கத்தியால் குத்தப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-14 15:20 GMT
உப்புக்கோட்டை:

சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னமாரிமுத்து (வயது 38). வியாபாரி. அவருடைய சகோதரர்கள் போதுமணி (36), நாகன் (49). இவர்கள் 3 பேரும் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அங்கு பலாப்பழ கடை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி கோவில் திருவிழாக்கு வந்த வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த முகில் வண்ணன் (25), அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த அஜய் (25), பால்பாண்டி (24), பழனி (25), ஜெகதீஸ் (24), முத்துப்பாண்டி (19) ஆகிய 6 பேரும் சேர்ந்து பலத்த சத்தத்துடன் பீப்பிகளை ஊதிகொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த சத்தத்தால் சின்னமாரிமுத்துவின் குழந்தை அழுதது. இதனால் அவர்களை சின்னமாரிமுத்து தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அஜய், தான் கையில் வைத்திருந்த கத்தியால் சின்னமாரித்துவை குத்தினார். இதனை தடுக்க முயன்ற அவருடைய சகோதரர்களை அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

இது குறித்து சின்னமாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகில் வண்ணன், அஜய், பழனி ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்