கடம்பூரில் காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டம்

கடம்பூரில் காங்கிரஸ் பிரமுகர் நூதன போராட்டம் நடத்தினார்

Update: 2022-05-14 13:30 GMT
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அய்யலுசாமி. இவர் நேற்று கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு வந்து, காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கி போராட்டம் நடத்தினார். காலை 7 மணி முதல் 8 மணி வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். அருகில் ராஜீவ்காந்தி, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய பேனர்களையும் வைத்திருந்தார். இதுபற்றி அய்யலுசாமி கூறும்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும், என்றார். காங்கிரஸ் பிரமுகரின் இந்த நூதன போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் பிரமுகர்கள்  உடன் நின்றனர். 

மேலும் செய்திகள்