தானேயில் பயங்கர தீ; 17 பிளாஸ்டிக் குடோன்கள் எரிந்து நாசம்

தானேயில் பயங்கர தீ விபத்தில் 17 பிளாஸ்டிக் குடோன்கள் எரிந்து நாசமானது.

Update: 2022-05-14 13:23 GMT
கோப்பு படம்
தானே, 

தானே சீல்பாட்டா பகுதியில் பழைய பிளாஸ்டிக் குடோன்கள் உள்ளது. இன்று அதிகாலை 4 மணி அளவில் அங்குள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை யாரும் அறியாததால் குடோனில் பற்றிய தீ மற்ற குடோன்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. 

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் நவிமும்பை, தானே ஆகிய இடங்களில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்தனர். குடோன்களில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தினால் அங்கிருந்த 17 பிளாஸ்டிக் குடோன்கள் எரிந்து தீக்கரையானது. தற்போது அங்கு குளிர்விக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்