மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம்;
சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஊராட்சியில் உள்ள ஒந்தி தோட்டத்தை சேர்ந்தவர் முத்துவீரன் (வயது 32). இவருடைய மனைவி ரம்யா. முத்துவீரன் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு முட்டை கம்பெனியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரம்யா கணவரிடம் கோபித்து கொண்டு ஜேடர்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்துவீரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்துவீரன் தந்தை தங்கராசுக்கு தகவல் கொடுத்தனர். இவர் இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துவீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொைல செய்து கொண்ட முத்துவீரனுக்கு விஜய பிரசாத் 4 என்ற மகனும், தன்ஷிகா (2) என்ற மகளும் உள்ளனர்.