தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை

தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை நடந்தது.

Update: 2022-05-14 10:52 GMT
கடையம்:

கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையில் வருணகலச பூஜை நடைபெறும். விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை  நடைபெற்றது. மலை மேல் உள்ள முருகனுக்கும், பத்ரகாளி அம்மனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலை மேல் சுனையில் இருந்து கலசங்களில் தீர்த்தம் எடுத்து வந்து மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்