கள்ளக்காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: கத்தியால் குத்தப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி சாவு - நண்பர் கைது

கள்ளக்காதலியிடம் பேசியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-14 10:45 GMT
பூந்தமல்லி,  

சென்னை நெற்குன்றம், சி.டி.என்.நகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). கழிவுநீர் லாரி டிரைவர். இவர் தனது நண்பரான நெற்குன்றம் ஜெயராம் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (34) என்பவருடன் சேர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் மது அருந்தினார்.

அப்போது ராமசந்திரனின் கள்ளக்காதலியிடம் சுப்பிரமணி செல்போனில் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், சுப்பிரமணியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய கோயம்பேடு போலீசார், ராமச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்