அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; 80 மி.மீட்டர் மழை பெய்தது

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது. 80 மி.மீட்டர் மழை பெய்தது.

Update: 2022-05-13 21:41 GMT
அந்தியூர்
அந்தியூர் பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடியாக கணக்கிடப்படுகிறது.  தற்போது பர்கூர் மலைப்பகுதியில் தொடர்  மழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 27 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 29 அடியாக அதிகரித்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று முன்தினம் மட்டும் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 80 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.

மேலும் செய்திகள்