நடைபாதை வியாபாரியை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு
நெல்லையில் நடைபாதை வியாபாரியை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் நம்பிகுமார் (வயது 40). இவர் டவுன் கீழரதவீதியில் நடைபாதை கடை அமைத்துள்ளார். இது தொடர்பாக அங்குள்ள பாத்திரக்கடை ஊழியர்களுக்கும், நம்பிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையொட்டி 2 தரப்பினரும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நம்பிகுமாரை, தச்சநல்லூர் பகுதியில் வைத்து தாக்கியதாக இளஞ்செழியன், சக்திவேல், மதன் உள்பட 4 பேர் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.