பனைமரத்தில் கள் இறக்கி குடித்தவர் கைது

பனைமரத்தில் கள் இறக்கி குடித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-13 21:26 GMT
தா.பழூர்:
தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் பகுதியில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தேவாமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த மதியழகன்(வயது 59) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மதியழகன் மண் கலயத்துடன் அமர்ந்து இருந்ததாகவும், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மதியழகனை போலீசார் வளைத்துப் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவரது வயலில் இருந்த பனை மரத்தில் அவர் மட்டும் குடிப்பதற்காக கலையம் கட்டி கள் இறக்கி குடித்துக் கொண்டிருந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கள்ளுக் கலையத்தில் சிறிதளவு மீதம் இருந்த கள்ளை அங்கேயே அழித்துவிட்டு, போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்