வெள்ளோடு அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 7½ பவுன் நகை பறிப்பு

வெள்ளோடு அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் 7½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

Update: 2022-05-13 21:19 GMT
சென்னிமலை
சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே சிறுவன்காட்டுவலசு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் தொட்டிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி செல்வி (வயது 47) கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பூசாரியிடம் விபூதி வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்வியின் கழுத்தில் இருந்த 5½ பவுன் எடையுள்ள சங்கிலியை யாரோ மர்ம நபர் பறித்து சென்றுவிட்டார்.
அதேபோல் இதே கோவிலில் ஈரோடு கஸ்பாபேட்டை கள்ளகவுண்டன்பாளையத்தை சேர்ந்த லட்சுமி (75) என்பவரும் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர் பறித்துள்ளார்.
நகைகளை பறிகொடுத்த செல்வி, லட்சுமி ஆகியோர் வெள்ளோடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், உத்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்,

மேலும் செய்திகள்