வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வீரவநல்லூர் அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள திருப்புடைமருதூர் ரத்தினவேல் பாண்டியன் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சமுத்திரம் மகன் இசக்கிப்பாண்டி (வயது 24). இவர் வீரவநல்லூரில் கடந்த மாதம் 11-ந் தேதி நகைக்கடை உரிமையாளரை அரிவாள் மற்றும் இரும்புக்கம்பியால் தாக்கி 4½ கிலோ தங்க நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் வீரவநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இசக்கிப்பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் இதனை ஏற்று இசக்கிப்பாண்டியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் (பொறுப்பு) இசக்கிப்பாண்டியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.