ரூ. 6¼ லட்சம் கையாடல்; மேலாளர், காசாளர் பணியிடை நீக்கம்
கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ரூ. 6¼ லட்சம் கையாடல் செய்ததாக மேலாளர், காசாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கூட்டுறவு துணைப்பதிவாளர் (பால்வளம்) நவராஜ், ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ரொக்க கையிருப்பில் ரூ. 6 லட்சத்து 24 ஆயிரத்து 415 குறைந்தது. இந்த குறைவுக்கு காசாளர் வேல்முருகன் பொறுப்பாகும் நிலையில் இதனை தடுக்க தவறிய மேலாளர் (பொறுப்பு) தங்க மாரியப்பன் ஆகிய இருவரும் பணத்தை தற்காலிக கையாடல் செய்வது உறுதியானதாக இவர்கள் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து துணைப்பதிவாளர் (பால்வளம்) நவராஜ் உத்தரவிட்டுள்ளார்.