பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
கோட்டூரில் பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தோட்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது35). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அதே தெருவை சேர்ந்த முருகேசன் (30), தமிழரசன் (31) ஆகிய இருவரும் குடிபோதையில் கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே தள்ளி தாக்கியுள்ளனர். இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து முருகேசன், தமிழரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து செய்தனர்.