சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
வாய்மேடு
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியைமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், நெய், திருநீறு உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.