வடுவூர் கோதண்டராமர் கோவிலில் கருட சேவை
நரசிம்ம ஜெயந்தியையொட்டி வடுவூர் கோதண்டராமர் கோவிலில் கருட சேவை நடைபெற்றது.
வடுவூர்:
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. நரசிம்ம ஜெயந்தியொட்டி தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி வீதி உலா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று கருடசேவை நடைபெற்றது. கோவிலில் இருந்து லஷ்மி நரசிம்மர் சாமி கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. பின்னர் கோவிலை வந்தடைந்ததும் கும்ப தீப ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் . திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.