அம்மன் தாலி சங்கிலி திருட்டு
லால்குடியில் கோவில் கதவின் பூட்டை உடைத்து அம்மன் தாலி சங்கிலியை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லால்குடி, மே.14-
லால்குடியில் கோவில் கதவின் பூட்டை உடைத்து அம்மன் தாலி சங்கிலியை திருடிய ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தாலி சங்கிலி திருட்டு
லால்குடி ெரயில்வே மேம்பாலம் தெற்கு பகுதியில், வடக்கு அய்யன் வாய்க்கால் கரையில் வீரமத்தி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலையில் இக்கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது, கோவிலின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் கிடந்த அரைபவுன் தாலி சங்கிலி திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம ஆசாமி ஒருவன் நள்ளிரவில் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.
வலைவீச்சு
பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலியை பறித்து விட்டு, அதில் கவரிங் நகைகளை வீசி எறிந்துவிட்டு மர்ம ஆசாமி தப்பி சென்றுள்ளான்.
இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.