உலக செவிலியர் தினம்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நடந்தது.
ஆம்பூர்
ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் சர்மிளாதேவி தலைமை தாங்கினார். விழாவில் மெழுகுவர்த்தி ஏற்றி செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர். செவிலியர்களுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் மருத்துவத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செவிலியர் பா.கீதா ராமபிரபு செய்திருந்தார்.