தர்மபுரிக்கு பலாப்பழங்கள் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.30-க்கு விற்பனை

தர்மபுரிக்கு பலாப்பழங்கள் வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-05-13 19:05 GMT
தர்மபுரி:
தமிழகத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி ஆகிய மலைப்பாங்கான பகுதிகளில் பலா மரங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு விளையும் பலாப்பழங்கள் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு பண்ருட்டி பகுதியில் இருந்து பலா பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ பலாப்பழம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் 3 பலா சுளைகள் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி பகுதியில் பலாப்பழம் விற்பனை தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்