பாப்பாரப்பட்டி அருகே சூதாடிய 7 பேர் கைது
பாப்பாரப்பட்டி அருகே சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சூதாடி கொண்டிருந்த கல்மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரி (வயது45), சிட்லகாரம்பட்டி வினோத் (32), தொட்லாம்பட்டி சிவா (27), பாலவாடி ராஜா (40), நீலாஞ்சனூர் குமார் (41), பேடரஅள்ளி மகாதேவன் (44), சி.எம்.புதூர் முருகன் (52) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.