ஓசூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம்
ஓசூரில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பேசுகையில், வருகிற 22-ந்தேதி ஓசூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகைதரும், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷேக் ரஷீத், மாநகர தி.மு.க பொருளாளர் சென்னீரப்பா, தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாச ரெட்டி, பூனப்பள்ளி கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா, ஓசூர் மாநகராட்சி மண்டல, நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.