பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை வாலிபர் போக்சோவில் கைது

பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை வாலிபர் போக்சோவில் கைது

Update: 2022-05-13 18:51 GMT
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகா குண்டநாடு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 20). இவர், நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்தை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு ராசிபுரம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்