ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது

Update: 2022-05-13 18:37 GMT
சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அன்புச்செழியன், பேரூராட்சி உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கீதா வரவேற்று பேசினார். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே பேச்சு, கட்டுரை போட்டிகள், பாட்டுப்போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பரிசுகள் வழங்கினார். இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்