சிவகிரியில் 73 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை
சிவகிரியில் 73 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் விழா நடைபெற்றது
சிவகிரி:
சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடுகட்ட ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. நகர பஞ்சாயத்து தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கி, 73 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கினார்.
நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ரத்தினராஜ், விக்ணேஷ், ரமேஷ், இருளப்பன், மருதவள்ளி, கிருஷ்ணலீலா, தலைமை எழுத்தர் தங்கராஜ், மற்றும் முத்துப்பாண்டி, சக்திவேல், தினேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.