அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது; மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
முதுகுளத்தூர் அருகே பள்ளியில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் மரத்தடியில் படித்ததால் உயிர் தப்பினர். காரை பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே பள்ளியில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் மரத்தடியில் படித்ததால் உயிர் தப்பினர். காரை பெயர்ந்து விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் லேசான காயம் அடைந்தார்.
அரசு பள்ளி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆனைசேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆனைசேரி, நீர்க்கோழியனேந்தல், கீழக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 32 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதன்பிறகு ஆங்காங்ேக விரிசல் ஏற்பட்டதால் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. இருப்பினும் பள்ளி கட்டிடம் ஆங்காங்கே சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் மாணவர்கள் நலன் கருதி மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வந்தனர்.
ேமற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது
இந்த நிலையில், நேற்று பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் தளத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. நல்லவேளை அப்போது வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் உயிர் தப்பினர். ஆனால் இதில் ஒரு ஆசிரியர் மீது காரை விழுந்து அவர் காயம் அடைந்தார். உடனே அவரை சக பள்ளி ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கட்டிட மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்த போது மாணவர்கள் வெளியே மரத்தடியில் பாடம் கற்று கொண்டிருந்தனர். இதனால் மாணவர்கள் காயமின்றி தப்பினர். ஏற்கனவே புதிதாக அமைக்கப்பட்ட இந்த கட்டிடம் சீரமைத்த பின்னரும் காரை பெயர்ந்து விழுந்ததால் புதிதாக ஒரு பள்ளி கட்டிடத்தை அமைக்க வேண்டும். பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.