கிராம வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்

திருக்கடையூரில் கிராம வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது

Update: 2022-05-13 18:04 GMT
திருக்கடையூர்
திருக்கடையூரில், கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அண்ணா திட்ட ஒருங்கிணைப்பு முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். முகாமில் பட்டா மாறுதல், விவசாய நிலத்திற்கு குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல், பயிர்க்கடன் விண்ணப்பம் உள்ளிட்ட மனுக்களை வேளாண்மை உழவர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர் மோகனகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, நோய்த்தொற்று பரிசோதனை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர்.

மேலும் செய்திகள்