ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்
உளியநல்லூர் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை நடந்தது.
அரக்கோணம்
நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட உளியநல்லூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார நிலைய கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதமுத்து, சிவராமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நெமிலி ஒன்றியகுழு தலைவர் வடிவேல் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நெமிலி மேற்குஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கவுரி, சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி, உதவி பொறியாளர் ராஜேஷ், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகமது அப்துல் ரகுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.